துச்சனே



துச்சனே…
தூய்மையான என் நெஞ்சை
தூபம் போட்டு சாய்த்தவனே…

தூசு மாசு அண்டாமல் சேய் போல் காத்த தோழனே…
தூண்டில் போடாத உன் கண்ணிலும்
துய்க்க நினைக்காத உன் நெஞ்சிலும்
விழுந்துவிடேனடா கிராதகா……..

என்ன செய்தாய் என்னை?

தினம் காலை எழுவதும்
பின்னிரவில் அழுவதும்
உன் குரலின் ரீங்காரத்தில் தான்

எப்போது பார்பாய் என்று தெரியாமல்
புருவத்தின் சுளிவை வெட்டி கொண்டதும்
புன்சிரிப்பை உதட்டோடு ஒட்டிக்கொண்டதும்
உனக்காகத்தான்

மூன்று நிமிடத்திற்க்கு மேல்
ஒப்பனை செய்யாதவள்
மூன்று மணி நேரம் விரயம் செய்வதும் …….

பதற்றதுடன் நகரும் போதும்
பின்சென்று ஒரு முறை பிம்பம் பார்பதும் ……

ஒரு மொட்டு மல்லிகைகே முகம் சுழிப்பவள்
ஒரு மும் பூவணிந்து வருவதும்

நீ என்னை பார்கும் அந்த ஒரு நொடி அதிர்வுக்காகதான்.

என்ன செய்தேன் உனக்கு?

வெந்து துவளும் உன் நெஞ்சுக்கு
வெண்சாமரம் வீசவில்லை நான்
உடைந்து துகளாய் மாறும் போதெல்லாம்
ஒட்டவைத்தாய் நீ.

உன் கண்ணீர் என் கால்களை சுட்ட போதும்
கலங்கவில்லை நான்
காமப் பார்வைகள் என்னை தீண்டினாலே
அவர்கள் கண் பரித்தாய் நீ

உன் முகம் பார்த்துகூட பேசவில்லை நான்
உன் மூச்சுக் காற்றுக்கும் என் பெயர் சொல்லி குடுத்தாய் நீ

காதலோடு நீயும் வந்தாய்
காமம் என்று நான் விலகிச்சென்றேன்

கடிதங்களோடு பிற பெண்கள் காத்து நின்றும்
என் கைகுட்டையோடு மட்டுமே நீ காலம்களித்தாய்
உண்மைத்தான்
உன் மீது காதல் கொண்டேன்

காதலின் உச்சதிலும் கர்வம் குறையாத உன் ஆண்மை மீது
காதலை நான் மறுத்தபோது
கழன்று விழுந்த உன் கண்ணீர் மீது
என்னக்காக காத்திருக்கும் நேரம்
கண்மூடீ நீ காணும் கனவுகளின் மீது
கடிகாரம் பார்க்காத உன் கண்ணியத்தின் மீது
கண் முன்னே என்னை கண்டுவிட்டால் – உன்
கண்ணுக்குள் தெறிக்கும் மின்னலின் மீது
தொட்டு விடாமல் பெசும் உன் தூய்மையின் மீது
துக்கத்தை நான் மறைக்கும் நேரம்
உன் கண்ணில் கனலும் அனலின் மீது
ஊடுருவி உன் கண்களின் மீது
உயிர்தெழச்செய்யும் உன் வார்த்தைகளின் மீது

இப்படி
எல்லாவற்றிலும் ஈர்க்கப்பட்டேன்
மையலுற்றேன் மயங்கினேன்
கழிப்புற்றேன் கலங்கினேன்
சொல்லத்துடித்தேன் உதட்டை கடித்தேன்
உள்ளுக்குள் ரசித்தேன்
உன்முன்னே மறைத்தேன்
ஊமையாய் இருந்தேன்
உன் பார்வை தவிர்த்தேன்
காலம் கழியட்டும்
என்றெண்ணி இருந்தேன்
காதல் இல்லை என்று கதைத்தேன்
என்னை நானே வதைத்தேன்
கவிதைகளில் ஒட்டிய உன் கண்ணீர் கண்டேண்
கபட நாடகம் துறந்தேன்
உன் காலடிச்சரண் புகுந்தேன்
கண்ணீரை துடைத்தேன்
கண்ணீரில் திளைத்தேன்


Featuring & UnPlugged By Ms.Meena

2 கருத்துகள்: