இரண்டு வானங்கள்


அந்தி வேளையிலே ஆதவன் அமரும் வேளையிலே
ஆற்றங்கரையின் ஓரத்திலே நின்ற நான் கண்டதோ இருவானங்கள்
ஒரு வானம் சிறிதும் வெட்கப்படாமல் மலைச்சாரலைத் தூவியது,
மற்றொன்று பெண்ணவள் எனும் என்னவளாகிய வானம்
செக்கச் செவேலென்று சிவந்து வெட்கப்பட்டு அந்த வெட்கத்தையே
மலைச்சாரலாய் எந்தன் கண்முன்னே எனக்காய் தூவிக்கொண்டிருந்தது,
மணலில் ஒரே ஒரு முத்து பதித்தாற்போல் உள்ள அவள் விரல்களைத்
தீண்டி அவளின் முதற்ஸ்பரிசத்தை அளித்தேன் அவளுக்கே,
மலைத்தூரல் திடீரென இடி மின்னல் சூறாவளியானது,மீண்டேன்
என் கண் இமைகளை துடைத்துக்கொண்டு அவள் இதழ் சிலிர்த்த சிரிப்பில்,
அத்துடன் எனது எழுதுகோலை நிறுத்திவிட்டு எழுந்தேன் கரையிலிருந்து
அவளுக்காக நான் படைத்த கவிதை எனும் கப்பலை கரை சேர்த்துவிட்டு ........

0 comments: