சூரியனின் வெட்கம்


சட்டைக்கு ஊற்றிய கஞ்சி போல் வெடப்பாய்
வந்திறங்கியது அந்த சூரியன் அதிகாலையிலே
கண்ணை திறக்கவா வேண்டாமா என்று கண்மூடி நீ யோசிக்கையிலே
ம்.... என்று ஐம்புலன்கள் மட்டுமல்ல உடலையே நெளித்து
நீ முறித்த சோம்பலின் அழகை ரசித்து வெட்கப்பட்டு
ஓடிப்போய் மேகத்தில் ஒளிந்து கொண்டது சூரியன்
மேகம் வந்து பார்த்து உன் அழகில் சொருகி கலைந்தேப் போனதடி
பாவம் நட்ட நடுவில் சூரியன் இன்னும் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
ஏனென்றால் பல் துலக்கிக் கொண்டே நீ அதன்
அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா

0 comments: