கவிதை

                                     

வருணபகவானும் வழிமறித்தார் என்னை
துள்ளிக் குதித்து ஆடிப்பாடியது என் காகிதம்

காற்றுக்கூட என்னை கலங்க வைத்தது
உசைன் போல்ட்டை மிஞ்சியது என் காகிதம்

மின்சாரம் மட்டும் விதிவிலக்கல்ல அதுவும் விளையாடியது
பார்வையற்றக் குருடனாய் திரிந்தது என் காகிதம்

யாராலும் மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது
அழிக்க கூட முடியாது ஏன் நான் நினைத்தால் கூட

கழுகாய் உன்னைச் சுற்றிய எந்தன் கண்களும்
அது கூட்டில் உணவாய் சேமித்ததைப் போல் அதன்
மனதில் சேமித்த உன் நினைவுகளைத் தானடி சொல்கிறேன்

ஈன்றெடுத்தேன் உன்னை எழுத்துகளாய் என் நினைவில்
தொட்டிலிட்டேன் உன்னை கவிதையாய் என் ஏட்டில்

அந்த ஏடு கைக்குழந்தையாய் கைமாறியது
அனைவரிடமும் அவளைத்தவிர
எந்தன் இறுதிக்குள் உறுதியாகுமா அதன் பயணம்
அவளைத் தேடியல்ல அவளிடம்.....

0 comments: