அதுவரைக்கும் வாய்க்குள் முனங்கிக் கொண்டிருந்தது
ஆர்வம் பொங்கி வாய் பிளந்து கத்துகிறது இப்பொழுது
ஏனென்றால் அதனை உன் விரல்கள் அணைப்பதற்காக
அதன் உண்மையான அன்பிற்கு அதுவும் நடந்தது
காது கிழியுமளவு கத்தியதை நீ வைத்தாய் உன் காதுகளில்
நீ பேசியது யாரிடமோ நினைத்து அது அதனிடம் என்று
காதல் மயக்கத்தில் தள்ளாடிய அதை சேர்த்தாய் பத்திரமாய்
இன்னொருவர் சுழற்றினார் அந்த தொலைபேசி எண்ணை
அவருக்குக் கிடைத்த பதில்கள் என்னவோ பழசுதான் ஆனால்
முதலாவது தடவை : நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்
பிசியாக உள்ளார் என்று
இரண்டாவது தடவை : நீங்கள் தொடர்பு கொண்ட எண்
not reachable என்று
மூன்றாவது தடவை : நீங்கள் தொடர்பு கொண்ட எண்ணை
சரி பார்க்கவும் என்று.......
0 comments: