வாழ்க்கை

   
                             

மணப்பெண்ணாய் சிங்காரித்தார்கள் அவளை
மணமகனாய் மிடுக்கிட்டான் அவன்
பெரியோர்கள் சொன்னார்கள் என்று தாலி கட்டினான் அவளுக்கு
பெற்றோர்கள் சொன்னார்கள் என்று குங்குமம் இட்டான் அவளுக்கு
காலம் சொன்னது என்று வாழ்ந்தான் அவளோடு
அவற்றின் அருமைகள் இருவருக்கும் தெரியாமலே வாழ்ந்தனர் இருவராக
மீண்டும் அந்நாள் வந்தது
மணப்பெண்ணாய் சிங்காரித்தார்கள் அவளை
மணமகனாய் மிடுக்கிட்டான் அவன்
பெரியோர்கள் சொன்னார்கள் என்று கட்டியத் தாலியை அறுத்தனர் அவன்கண்எதிரே
பெற்றோர்கள் சொன்னார்கள் என்று இட்ட குங்குமத்தை அழித்தனர் அவன்முன்னால்
காலம் சொன்னது என்று வாழ்ந்தவன் பார்த்துக்கொண்டிருந்தான் இதை உயிரற்ற பிணமாக
இவை மட்டுமல்ல இவனில்லாமலும் நான் வாழேன் என்று சொல்லிக்கொண்டே
அனைவரின் முன்பாகவே உடன்கட்டை ஏறினாள் அவனோடு அவள்
வாழவேண்டிய காலத்தில் வாழ்ந்தது இருவராக
வாழ்ந்து முடிந்த பின்னர் இருந்தது ஒருவராக
யாவருக்கும் அந்த வாழ்க்கை புரிவது கடைசி நொடியிலே..... 

0 comments: