என்னவளே உனது கொலுசு ஒலியின் அதிர்வலைக் கேட்டு
கதிரவன் மேல் வைத்த கண்ணைக் கடத்தி உன்மேல் வைத்தன
உன் கன்னக்குழியில் இருந்து அந்த இரு உதட்டில் விழும்
முத்துப் பற்களின் அசைவில் உருவாகும் சிரிப்பில் இலைகள்
அனைத்தும் பச்சையம் தயாரித்தன தன்னை மறந்து தானாக...
ஏனென்று கேட்டேன் அவைகளிடம்
சூரியனைப் பார்த்தால் உயிர் வாழலாம்
ஆனால் இறந்தால் மண்ணில் தான் விழவேண்டும்
ஆனால் அவளைப் பார்த்தால் மட்டும்தான் இறந்தாலும் உயிர் வாழலாம்
இலையாக மண்ணில் இல்லை அவள் கைகளில்......
0 comments: