உன்னோடு காதலில் விழுந்தது நான் மட்டுமல்ல
நானே உன்னை காணதிருந்தாலும்
என்னைவிட உன்னை அனுதினமும் காதலித்து
என்னிடமிருந்து உந்தன் முயல் கண்களை
முதல்பார்வையிட வந்த அந்த எழுத்துகள் தானடி
உன் காஜல் பூசிய அந்த விழி இரண்டை கண்ட பின்புதான்
மெய்யெழுத்து கூட மெய் சிலிர்த்து காதலில் விழுந்தது
உயிரெழுத்து கூட உயிரில்லாமல் அலைந்தது
வல்லினம் கூட வழிமாறி நின்றது
மெல்லினம் கூட மென்று தின்றது உணவை
இடையினம் கூட இடைவெளி இல்லாமல் கண் சிமிட்டியது
என்னை விட இவை எல்லாம்
உன்மேல் காதல் வயப்பட
நான் மட்டும் நிற்கிறேன்
அந்த எழுத்துகளுக்கு பின்னால்
இப்பொழுது நீயே இல்லை என்று
என்னிடம் சொல்லிவிட்டாயே
உன்மேல் காதலில் விழுந்த
இவைகளிடம் என்ன சொல்வேனடி நான்...
0 comments: